படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ்பாண்டியன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சுராஜ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘அப்பாடக்கரு’. இந்த படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, பிரபு, விவேக், சூரி உள்பட பலர் நடித்து வருகின்றனர். எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சிகளை பாங்காங்கில் படமாக்க இயக்குனர் சுராஜ் முடிவு செய்திருந்தார். ஆனால் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி ஆகிய மூவரது கால்ஷீட்களும் ஒரே நேரத்தில் இந்த பாடலுக்காக தேவைப்பட்டது. மூவருமே பிசியாக இருப்பதால் இந்த பாடலின் படப்பிடிப்பு தள்ளி போய்க்கொண்டே இருந்த நிலையில் தற்போது அதிர்ஷ்டவசமாக மூவரது கால்ஷீட்டும் ஒரே நேரத்தில் கிடைத்துவிட்டதாகவும், அதனால் உடனடியாக படக்குழுவினர் பாங்காக் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜெயம் ரவி நடித்த மற்றொரு படமான ‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படம் வரும் 12ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் அப்பாடக்கரு திரைப்படமும் வெகுவிரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.