மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் ரசாயன பொருட்கள் இருப்பதாக சோதனைகள் மூலம் நிரூபணம் ஆனதால் தமிழகம் உள்பட பல மாநிலங்கள் அந்த உணவுபொருளை தடை செய்துள்ளது. தற்போது நாடு முழுவதிலும் இருந்து மேகி நூடுல்ஸ்ஸை திரும்ப பெற நெஸ்ட்லே நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேகி நூடுல்ஸ் மீது விதிக்கப்பட்ட தடை காரணமாக அதன் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை கண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகள், பங்குச் சந்தையில் கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வாரத்தின் துவக்க நாளான திங்கட்கிழமை ரூ.6570க்கு விற்பனையான நெஸ்ட்லே இந்தியாவின் பங்குகள் நேற்று கடுமையாக வீழ்ச்சி அடைந்து ரூ.5,820க்கு விற்பனை ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்று ஓரளவுக்கு இந்த நிறுவனத்தின் பங்குகள் ஏறி தற்போது சுமார் ரூ.6,070 என விற்பனை ஆகி வருகிறாது.