36 வயதில் அறிமுகமாகி உலக சாதனை செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.

cricketஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றது. இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 3ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 318 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த போட்டியில் தனது 36வது வயதில் முதன்முதலாக களமிறங்கிய ஆடம் வோக்ஸ் என்ற ஆஸ்திரேலிய வீரர் மிக அபாரமாக விளையாடி 247 பந்துகளில் 130 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் மிக அதிக வயதில் சதமடித்த உலக சாதனையையும் இவர் ஏற்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்னர் ஜிம்பாவே வீரர் டேவிட் ஹட்டன் 35 வயதில் சதம் அடித்ததே உலக சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 36வது வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உலக சாதனை செய்த ஆடம் வோக்ஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களை இழந்து 25 ரன்கள் எடுத்துள்ளது.

Leave a Reply