இந்தியாவின் முதல் டிரைவர் இல்லாத ரயில். டெல்லி மெட்ரோ ரயில்வே நிறுவனம் அறிமுகம்

trainஇந்தியாவில் முதன் முதலாக டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை புதுடெல்லியில் அறிமுகம் ஆகவுள்ளது. இந்த ரயிலில் டிரைவருக்கு என்று தனியாக கேபின் எதுவும் இல்லை என்பதால் பொதுவாக இயக்கப்படும் ரயிலை விட இந்த ரயிலில் கூடுதலாக 240 பேர் பயணம் செய்யலாம். ஒரே நேரத்தில் 2,280 பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்ய முடியும்.

தென்கொரியாவின் சாங்வான் நகரில், அந்நாட்டு தொழில் நுட்பத்தினால்ல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் டில்லி மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு மையங்கள் மூலமாக இயக்கப்படும். ரயிலின் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி கேமராக்கள் ரயிலின் உட்புறமும், வெளிப்புறமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு அனைத்தும் மெட்ரோ ரயிலின் கட்டுப்பாட்டு மையங்களில் இருந்து அதிகாரிகளால் கண்காணிக்கப்படும்.

இந்த ரயில், டில்லியில் மஜ்லிஷ் பூங்கா-ஷிவ் விஹார் மார்க்கத்தில் 59 கி.மீ., தூரமும், ஜனக்பூரி மேற்கு-பொட்டானிக்கல் கார்டன் மார்க்கத்தில் 38 கி.மீ., தூரமும் தினமும் பயணிகளை சுமந்து செல்ல காத்திருக்கிறது. இந்தியாவில் பெங்களூருவில் உள்ள BMEL என்ற நிறுவனத்திலும் வடிவமைக்கப்படும் எனவும், இந்த ரயில் சேவை 2016 ல் நடைமுறைக்கு வரும் என்றும் மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply