இனிப்பும் புளிப்பும் கலந்த பழம், திராட்சை. கறுப்பு, பச்சை என இரண்டு வகை நிறங்களில் கிடைக்கும் திராட்சையில், தாது உப்புக்களும் ஆன்டிஆக்ஸிடன்ட்டும் நிறைந்திருக்கின்றன. நீர்ச்சத்து நிறைந்தது என்பதால், டீஹைட்ரேட் ஆகும் வாய்ப்பு குறையும்.
தொடர்ந்து திராட்சைகளை எடுத்துக்கொண்டால், மலச்சிக்கல் தீரும், சிறுநீர் நன்கு கழியும்.
இதில் உள்ள ஃப்ளவனாய்ட்ஸ் மற்றும் ரிஸ்வெரட்றால் (Resveratrol) எனும் வேதிப்பொருட்கள், எல்.டி.எல் என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
ரத்தஅழுத்தம் குறையும். இதய நோய்கள் வராமல் தடுக்கும். இதனால்தான், திராட்சை ஜூஸை ‘இதய டானிக்’ என்பர்.
இரும்புச்சத்து அதிகம். ஹீமோகுளோபின் உற்பத்தியைப் பெருக்கும். காலை எழுந்தவுடன் காபி, டீ-க்கு பதிலாக, சர்க்கரை சேர்க்காத திராட்சை ஜூஸ் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
கர்ப்பக்காலத்தில் இதை எடுத்துக்கொண்டால், மலச்சிக்கல் வராது.
பால் பற்கள் முளைக்கும்போது, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை சரிசெய்ய, திராட்சை ஜூஸை ஒரு ஸ்பூன் அளவுக்கு, இரண்டு வேளை கொடுக்கலாம்.
தினமும் 30 – 40 திராட்சைகள் உண்டால், குடல் புண் ஆறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். காமாலை, மலக்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைப் பெருமளவு குறைக்கும்.
ரிபோஃபிளேவின், தயாமின், அஸ்கார்பிக் அமிலம், வைட்டமின் பி6 போன்ற சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். அல்சைமர் என்ற மறதி நோய் வரும் வாய்ப்பு குறையும்.
திராட்சை (உலர்ந்தது அல்லது ஃப்ரெஷ்), பேரீச்சம்பழம், மிளகு, வாய்விடந்தை, வால்மிளகு, தேன் இவற்றை சமஅளவு எடுத்து, மை போல அரைத்துச் சாப்பிட்டால், வறட்டு இருமல் நீங்கும்.