நடிகை சன்னிலியோன் நடித்த படங்கள் சர்ச்சைக்குள்ளாவது என்பது புதில்லை. ஆனால் அவர் நடித்த ஒரு படத்தை சென்சார் அதிகாரிகளே வெளியிட தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் சன்னிலியோனின் ஆபாச புகைப்படங்கள் இணையத்தில் பரவியதால் அவரை நாடு கடத்த வேண்டும் என இந்து அமைப்பு ஒன்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சன்னிலியொன், துஷ்கார் கபூர் உள்பட பலர் நடித்துள்ள “மஸ்தி ஜாதே” என்னும் திரைப்படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் கொடுக்க அதிகாரிகள் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் நடிகை ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக், சன்னிலியோனிடம் பாலியல் கல்வி கற்றுக்கொள்வது போன்ற காட்சிகள் உள்ளதாம். மேலும் இந்த திரைப்படத்தில் ஆபாச காட்சிகள் அளவுக்கு மீறி உள்ளதாகவும், இதனால் இந்த படத்துக்கு தணிக்கை சான்று தர முடியாது என்று அவர்கள் உறுதியாக கூறிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதையடுத்து இந்த படத்தை மேல்முறையீட்டுக் குழுவுக்கு படக்குழுவினர் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கும் இந்த படத்தை வெளியிட தணிக்கை குழு தடை விதித்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆபாச காட்சிகளை வெட்டி விட்டு படத்திற்கு தணிக்கை சான்று தரும்படி படக்குழுவினர் வேண்டியதாகவும், ஆனால் படம் முழுவதுமே ஆபாசமாக இருப்பதால் இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர முடியாது என அதிகாரிகள் திட்டவட்டமாக கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.