கமல்ஹாசனிடம் முத்தம் பெற்ற ஆர்யா நாயகி.

thoongavanamகமல்ஹாசன் நடிக்கவுள்ள ‘தூங்காவனம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்த பர்ஸ்ட் லுக்கில் கமல்ஹாசன் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுப்பது போன்ற ஸ்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கமல்ஹாசனின் முத்தம் பெறும் நடிகை இந்த படத்தின் நாயகி த்ரிஷாதான் என்று அனைவரும் நினைத்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த பெண் யார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பர்ஸ்ட் லுக்கில் இருந்த நடிகை மதுஷாலினி என்று தற்போது தெரிய வந்துள்ளது. இவர் ஏற்கனவே ஆர்யா ஜோடியாக பாலா இயக்கிய ‘அவன் இவன்’ என்ற படம் உள்பட ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது கமல்ஹாசனின் தூங்காவனம் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கின்ரார். கமல்ஹாசனின் உதவியாளராக இருந்த ராஜேஷ் இயக்கும் இந்த படத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் வெளிநாடுகளில் தொடங்கவுள்ளது.

Leave a Reply