இந்திய வனப்பணிக்கான யூபிஎஸ்சி தேர்வு அறிவிப்பு

upsc-exam

இந்திய வனப்பணி (Indian Forest Service) பிரிவில் அதிகாரி அந்தஸ்து பணிகளில் சேருவதற்கான தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு அறிவிப்பு: 10/2015-IFoS

தேர்வின் பெயர்: Indian Forest Service Examination, 2015

வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 21 – 32க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics, Zoology, Agriculture, Forestry, Engineering போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

எழுத்து தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, வேலூர், புதுச்சேரி, திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, பெங்களூர், ஹைதராபாத் உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.06.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply