பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் அவர்களை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று வாவ்ரிங்கா சாதனை படைத்துள்ளார். அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், பிரெஞ்சு ஓபனில் முன்னணி வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்து இறுதி போட்டிக்கு தேர்வு பெற்றார். 9 முறை சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடாலை காலிறுதியில் வீழ்த்திய ஜோகோவிச், அதன் பின்னர் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதனால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச்கு எளிதில் வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த வாவ்ரிங்கா 4-6 6-4 6-3 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று அனைவரையும் ஆச்சிரியப்படுத்தினார். இந்த வெற்றி மூலம் தொடர்ந்து 28 ஆட்டங்களில் வெற்றி பெற்று வந்த ஜோகோவிச்சின் வெற்றி பயணம் முடிவுக்கு வந்துள்ளது. வாவ்ரிங்கா வெல்லும் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.