30 ஆண்டுகளாக தீர்க்க முடியாத கணித சமன்பாட்டிற்கு தீர்வு கண்டுபிடித்த நைஜீரிய மாணவர்

maths equationகடந்த முப்பது வருடங்களாக யாராலும் தீர்க்க முடியாமல் இருந்த கணித சமன்பாடு (maths equation) ஒன்றுக்கு நைஜீரிய மாணவர் ஒருவர் தனது முதல் செமஸ்டரிலேயே தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளார்.

ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படைத்து வரும் Ufot Ekong என்ற மாணவர் முப்பது வருடங்களாக யாராலும் தீர்வு செய்யப்படாத கணித சமன்பாட்டிற்கு தீர்வு கண்டுபிடித்து சிறந்த மாணவர் என்ற பெயரை தட்டி சென்றுள்ளார். எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் முதலாம் ஆண்டு படித்து வரும் இந்த மாணவர் கடந்த 1965ஆம் ஆண்டிற்கு பின்னர் சிறந்த மாணவர் என்ற பட்டத்தை பெறும் வெளிநாட்டு மாணவர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

ஆங்கிலம், பிரெஞ்ச், ஜப்பான் மற்றும் தனது நைஜீரிய தாய்மொழி ஆகியவற்றில் புலமையுடன் இருக்கும் இந்த மாணவர் ஏற்கனவே எலக்ட்ரானிக் கார் ஒன்றை அவராகவே தயார் செய்து அதற்கு பேடண்ட் உரிமையும் வாங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்த்க்கது.

Leave a Reply