பகவத் கீதை போட்டியில் வென்ற பரிசை திருப்பி கொடுத்த முஸ்லீம் சிறுமி.

NEWSவருடந்தோறும் பகவத் கீதை போட்டியை நடத்தி பரிசு வழங்கி வரும் இஸ்கான் நிறுவனம் இந்த வருடமும் அதேபோன்ற ஒரு போட்டியை நடத்தியது. இந்த போட்டியில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 12 வயது முஸ்லிம் சிறுமி மரியம் சித்திக் முதல் பரிசை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

வெற்றி பெற்ற மரியம் சித்திக் என்ற சிறுமிக்கு ரூ.11 லட்சம் ரொக்கப்பரிசை கடந்த சனிக்கிழமை நடந்த விழாவில் உத்தரபிரதேச முதல்–மந்திரி அகிலேஷ்யாதவ்  வழங்கினார். இந்த ரொக்கப்பரிசை பெற்றுக்கொண்ட சிறுமி, அந்த பணம் முழுவதையும் ஏழைக்குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக முதல்வரிடமே திருப்பி கொடுத்தார்.

இதுகுறித்து சிறுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: உத்தரபிரதேசத்தில் உள்ள ஆதரவற்ற மற்றும் ஏழைக்குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக இந்த பரிசுப்பணம் ரூ.11 லட்சமும் செலவிடப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலா கல்விக்காக பாடுபட்டு வருவதைப் பார்த்து நானும் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். ஏழை குழந்தைகள் ஒவ்வொருவரும் கல்விபெற வேண்டும். கல்வி ஒன்றால் மட்டுமே அவர்களது தலை விதியை மாற்றமுடியும். எனக்கு பரிசு வழங்கி கவுரவித்த உத்தரபிரதேச அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஏழைக் குழந்தைகள் கல்வி பெற வேண்டும் என்பதற்காகவே நான் ரூ. 11 லட்சத்தை திருப்பிக்கொடுத்துள்ளேன்.

இவ்வாறு மரியம் சித்திக் கூறினார்.

Leave a Reply