மேகி நூடுல்ஸ் தடை திடீர் நீக்கம். சிங்கப்பூர் அரசின் அதிரடி நடவடிக்கை ஏன்?

maggiமேகி நூடுல்ஸ் உணவுப்பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதாக தெரிய வந்ததை அடுத்து தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் மேகி நூடுல்ஸை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடை செய்தது.

சிங்கப்பூர் அரசு மேகி நூடுல்ஸ்ஸை தடை செய்ததை அடுத்து உடனடியாக சிங்கப்பூர் கடைகளில் இருந்து மேகி நூடுல்ஸ் அகற்றப்பட்டன.

இந்நிலையில், சிங்கப்பூர் அரசு விதித்திருந்த தடை இன்று திடீரென நீக்கப்பட்டதாக அந்நாட்டின் ஊடகங்களில் இன்று காலை முதல் செய்திகள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேகி நூடுஸ் உணவுப்பொருளுக்கு தடை நீக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பான மேலதிக தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானதுதான் என்றும், அதன் மீது தடை விதிக்க முடியாது என்றும் ஏற்கனவே மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply