2018-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியை ரஷியா நடத்தவுள்ள நிலையில் அந்த நாடு உலககோப்பை கால்பந்து போட்டியை நடத்த முடியுமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. சமீபத்தில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமம வழங்கியதில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரினை அடுத்து ‘பிபா’ தலைவர் செப் பிளாட்டர் அவர்களுக்கு பயங்கர எதிர்ப்பு வலுத்தது. இதனால் வேறு வழியின்றி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ரஷ்யாவுக்கு உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்த அவர் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுவதால் இந்த ஆதாரங்கள் நிரூபணம் ஆனால் ரஷ்யா இந்த போட்டியை நடத்த தடை விதிக்கப்படும் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சர்வதேச கால்பந்து சம்மேளன நிர்வாகி டொமினிகா ஸ்காலா அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது போட்டியை நடத்தும் உரிமம் பெறுவதற்காக ஏதேனும் லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் நிரூபணம் ஆனால் கண்டிப்பாக இந்த போட்டியை நடத்தும் நாடுகள் தங்கள் வாய்ப்பை இழக்க நேரிடும்” என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
எனவே வரும் 2018ஆம் ஆண்டு உலகக்கோப்பையை நடத்தும் நாடான ரஷ்யாவும், 2022ஆம் ஆண்டு இப்போட்டியை நடத்தும் நாடான கத்தாரும் கடும் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.