[carousel ids=”65717,65718,65719″]
பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தான் பெற்ற மூன்று பெண் குழந்தைகளை கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு அவர் கூறிய காரணம், ‘மூன்று பெண் குழந்தைகளுக்கும் படிப்பு மற்றும் திருமணம் போன்ற வெட்டிச் செலவு செய்ய நான் தயாராக இல்லை’ என்று கூறியுள்ளார். அவர் கூறிய காரணத்தை கேட்டு பாகிஸ்தான் மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவருமே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இர்ஷத் அஹமத் என்பவர் கடந்த ஞாயிறு அன்று தனது மூன்று பெண் குழந்தைகளுக்கும் இரவு உணவில் விஷம் வைத்து கொலை செய்துவிட்டார். மறுநாள் காலை குழந்தைகள் தூங்கி எழுந்திருக்காமல் இருந்ததை கண்டு திடுக்கிட்ட தாய், பின்னர் அவர்கள் மூவரும் மரணம் அடைந்ததையும், அதற்கு காரணம் தனது கணவனே என்பதையும் அறிந்து அதிர்ச்சிக்குள்ளானார்.
இந்த விஷயம் தெரிந்து பக்கத்து வீட்டார்கள் கொடுத்த புகாரின் பேரில் இர்ஷத் அஹமத் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸாரிடம் விசாரணை நடத்தியபோது, ‘மூன்று பெண் குழந்தைகளுக்கும் படிப்பு, மற்றும் திருமணம் போன்ற செலவு செய்வது வேஸ்ட் என்றும் எனது மகன் மட்டுமே படித்தால் போதுமானது என்பதால் கொலை செய்தேன்’ என்று அவர் அசால்ட்டாக கூறியதை கேட்டு போலீஸார்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மூன்று பெண் குழந்தைகளுக்கும் இதுவரை இர்ஷத் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றும் அந்த குழந்தைகளின் படிப்பு மற்றும் துணிமணி செலவை தனது தந்தையே செய்து வந்ததாக மூன்று பெண் குழந்தைகளை பறிகொடுத்த தாயார் ஷபனா கண்ணீருடன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.