மேகி நூடுல்ஸ் தடை எதிரொலி: 500 தொழிலாளர் வேலையிழப்பு

மேகி நூடுல்ஸ் தடை எதிரொலி: 500 தொழிலாளர் வேலையிழப்பு

maggiதமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளுக்கு தடை விதிக்கப்பட்டதால், மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் கம்பெனி மூடப்பட்டதாகவும், இதனால் அதில் பணிபுரிந்த சுமார் 500 ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

சுவிட்சர்லாந்து  நாட்டைச் சேர்ந்த நெஸ்லே நிறுவனம் கடந்த 1996 ஆம் ஆண்டு மேகி நூடுல்ஸ் நிறுவனத்தை  கோவா மாநிலம் பிச்சோலிம் என்ற ஊரில் அமைத்து அங்கு தயாரிக்கப்படும் நூடுல்ஸ் உணவை இந்தியா முழுவதும் வினியோகம் செய்து வந்தது.

இந்நிலையில் மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் ரசாயனம் கலந்திருப்பதாக வந்த புகாரை அடுத்து இந்தியாவின் பல மாநிலங்கள் மேகி நூடுல்ஸை தடை செய்தது.

இதனால் மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் நிறுவனம் கடந்த 5 ஆம் தேதி தனது உற்பத்தியை நிறுத்தியது. மேலும் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த 500 ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு வர வேண்டாம் என்று நெஸ்லே நிறுவனம் கூறிவிட்டது. இதனால் 500 தொழிலாளர்களும் வேலை இழந்து தவிக்கின்றனர்.

ஏற்கனவே விவசாய வேலைகள் செய்து வந்த இவர்கள் மேகி நூடுல்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து தினசரி ரூ.300 சம்பளமாக பெற்று வந்தனர். தற்போது அனைவரும் வேலையிழந்துள்ளதால் அதிர்ச்சியுடன் அடுத்து என்ன செய்வது என்பதை அறியாமல் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply