இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யா, அதிரடி ஆட்டத்திற்கு புகழ் பெற்றவர். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் 15 ஓவர்களில் அடித்து ஆட வேண்டும் என்ற வழக்கத்தை முதன்முதலில் கொண்டு வந்தவர் ஜெயசூர்யாதான். கடந்த 1996ஆம் ஆண்டு இலங்கை உலககோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ராஜபக்சேவை தோற்கடித்து இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்று கொண்ட சிறிசேனா, தனது அரசில் ஜெயசூர்யாவுக்கு மந்திரி பதவி கொடுக்க விரும்பினார். இதன்படி நேற்று ஜெயசூர்யா துணை மந்திரியாக பதவியேற்று கொண்டார். ஜெயசூர்யா ஏற்கனவே ராஜபக்சே அரசிலும் துணை மந்திரியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயசூர்யாவுடன் சேர்ந்து மேலும் மூன்று சுதந்திரா கட்சியை சேர்ந்தவர்களும் மந்திரி பதவியை நேற்று ஏற்றுக்கொண்டனர். சமீபத்தில் மந்திரிகளாக இருந்த 4 பேர் சமீபத்தில் பதவி விலகி ராஜபக்சே கோஷ்டியில் இணைந்தனர். அவர்களுக்கு பதிலாகவே ஜெயசூர்யா உள்ளிட்ட 4 பேர் மந்திரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று கூறப்படுகிறது.