கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படத்தில் பிரெஞ்ச் ஸ்டண்ட் கலைஞர்கள்?

kamalகமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படம் குறித்து தினமும் விதவிதமான வித்தியாசமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

வேட்டையாடு விளையாடு’ படத்திற்கு பின்னர் போலீஸ் அதிகாரியாக ‘தூங்காவனம்’ படத்தில் நடிக்கவிருக்கும் கமல்ஹாசன், இந்த படத்தில் பல அதிரடி சண்டைக்காட்சிகளை வைக்க முடிவு செய்துள்ளார். சண்டைக்காட்சிகள் அனைத்தும் தத்ரூபமாகவும், நம்பும் வகையில் இருக்கும்படியாகவும், அதே நேரத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் வராத அளவுக்கு பிரமாண்டமாகவும் இருக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக அவர் பிரெஞ்ச் நாட்டின் சண்டைப்பயிற்சியாளர்களை இந்த படத்தில் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

பல ஹாலிவுட் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர்களாக இருந்த கில்ஸ் கோன்செயில், சில்வெயின் கேபெட், மற்றும் விர்ஜினி அர்னாட் (Gilles Conseil, Sylvain Gabet and Virgine Arnaud) ஆகிய மூவரும் ‘தூங்காவனம்’ படத்தின் ஸ்டண்ட் பயிற்சியாளர்களாக ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கமல்ஹாசனுடன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், மதுஷாலினி, கிஷோர் ,சம்பத்குமார், யூகிசேது மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தை ராஜேஷ் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கின்றார்.

Leave a Reply