உலகில் எங்கு வன்முறை நடந்தாலும், அதை ஒடுக்குவதற்கும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் ஐ.நா. அமைப்பின் அமைதிப்படை செயல்பட்டு வருகிறது. இந்த படையில் சுமார் 125,000 வீரர்கள் பணிபுரிகின்றனர். இந்திய வீரர்கள் உள்பட பல்வேறு நாட்டு வீரர்கள் பணிபுரியும் இந்த அமைதிப்படை குறித்து தற்போது சர்ச்சைக்குரிய புகார் ஒன்று எழுந்துள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு ஹைத்தி நாட்டிற்கு சென்று அங்குள்ள ஏழை மக்களுக்கு உதவிட சென்ற ஐ.நா அமைதிப்படை, அங்குள்ள பெண்களிடம் பாலுறவுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே உதவிகள் வழங்க முடியும் என ‘பண்டமாற்றுப் பாலுறவு’ செயல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளது. ‘தி அசோசியேடட் பிரஸ்’ செய்தி நிறுவனம் தனது துப்பறியும் செய்தியாளர்கள் மூலம் இந்த விஷயத்தை கண்டுபிடித்து உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைத்தி நாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட கிராமப்புற பெண்களுக்கு பசி, வாழும் இடம், குழந்தைகளுக்கான தேவைகள், மருத்துவப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகிய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாறாக அந்தப் பெண்களிடம் பாலுறவு கொள்ளும் வழக்கத்தை அமைதிக் குழுவினர் வைத்துள்ளனர்.
அவை மட்டுமல்லாமல், செல்போன், லேப்டாப், பணம் உள்ளிட்ட பொருட்களையும் அந்தப் பெண்களுக்கு குழுவினர் அளித்தனர்” என்று ‘தி அசோசியேடட் பிரஸ்’ மேற்பார்வை குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது
இந்தச் செயல் எந்த சமயத்தில் நடந்தது, அதில் ஈடுப்பட்ட குழுவினரது விவரங்கள் என எதுவும் தெரியாத நிலையில் இது குறித்து பேச ஐ.நா. அதிகாரிகள் மறுத்துவிட்டனர். ஆனால், இந்த அதிர்ச்சிச் தகவல் தொடர்பான அறிக்கையை ஒரு சில மாதங்களில் ஐ.நா. வெளியிடும் என்று எதிர்பார்ப்பதாக அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.