இளையதளபதி விஜய் தற்போது ‘புலி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டதால் தனது குடும்பத்துடன் ஓய்வு எடுக்க லண்டன் சென்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாள் குறித்த அறிவிப்பை இயக்குனர் அட்லி தரப்பில் இருந்து தற்போது வெளியாகியுள்ளது
விஜய்யின் குழந்தைகள் சென்னையில் உள்ள அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்களுக்கு வரும் ஜுலை 1 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே விஜய் லண்டனில் இருந்து ஜூன் 30ஆம் தேதி திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய்-அட்லி இணையும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 1 முதல் சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. அஜீத்தின் ‘தல 56’ படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சென்னை பின்னி மில்லில் தான் விஜய் படமும் தொடங்கவுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடிக்கவுள்ளனர்.