அரசு ஊழியர்களை குறைக்க டெல்லி முதல்வர் அதிரடி திட்டம். கவர்னர் ஒத்துழைப்பாரா?

aravindடெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் துணைநிலை கவர்னர் நஜீப் ஜங்குக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்து வரும் நிலையில் சிக்கன நடவடிக்கை காரணமாக டெல்லியில் அரசு அலுவலர்களின் எண்ணிக்கையை குறைக்க முதல்வர் அதிரடியாக திட்டமிட்டுள்ளார். தற்போது பணிபுரிந்து வரும் அரசு அலுவலகர்களில் பலர் மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்பதால் அவர் இந்த எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து டெல்லி மாநில உயர் அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “டெல்லி மாநில அரசின் பல்வேறு துறைகளில் தேவைக்கு அதிகமாக அலுவலர்கள் இருப்பதாகவும், எனவே செலவை குறைக்கும் பொருட்டு அலுவலர்கள் எண்ணிக்கையை குறைக்க டெல்லி அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால் இந்த நடவடிக்கையால் முதல்வருக்கு புதிதாக தலைவலி வருமே தவிர எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை” என்று கூறினர்

டெல்லியின் குடிநீர் வாரியம், தொழில் துறை, பொதுப்பணித் துறை, பொது விநியோகம், மற்றும் அரசு ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆகிய துறைகளில் தேவைக்கு அதிகமான அளவில் ஊழியர்கள் இருப்பதாகவும், பல துறைகளில் அலுவலர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், தனது பணிகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, டெல்லி அரசு உயர் அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்ற விவகாரத்தில் முதல்வருக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் முற்றி வரும் நிலையில் அரசு அலுவலர்கள் எண்ணிக்கையைக் குறைத்தால் மேலும் புதிய சர்ச்சை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply