கடந்த பல ஆண்டுகளாக விண்வெளியில் உலக நாடுகள் பல்வேறு வகையான ஆய்வுகளை செய்து வருகின்றனர். விண்வெளி வீரர்களை அனுப்பி பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தி வரும் நிலையில் ஒரு நிறுவனம் முதல்முறையாக விண்வெளியில் ஆபாச படம் எடுக்க முடிவு செய்துள்ளது.
இதுவரை பல ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்டு வந்த ‘போர்ன்ஹப்’ என்ற இணையதளம், தற்போது ஆண்- பெண்ணை விண்வெளிக்கு அனுப்பி ஆபாச படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது இந்த படத்திற்கு அந்த இணையதளம் “செக்ஸ்ப்ளோரேஷன்ஸ்’ என்ற டைட்டிலை வைத்துள்ளது. இந்த படத்திற்காக அந்த இணையதளம் பல கோடிகளை செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தங்கள் வாடிக்கையாளர்கள் மூலம் சுமார் 25 கோடி ரூபாயை இதுவரை திரட்டியுள்ள இந்த இணையதம் இந்த படத்திற்காக ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்ய முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும், அடுத்த ஆண்டுக்குள் அதனை வெளியிடவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தப் படத்தில் நடிக்க ஆபாசப் பட நடிகை ஈவா லோவியா மற்றும் அவருக்கு ஜோடியாக ஜானி சின்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக விண்வெளிக்கு செல்வதற்கு முன்னர் அங்குள்ள புவி ஈர்ப்பு சக்திக்கு ஏற்ப செயல்படும் வகையில் இவர்களுக்கு சுமார் ஆறு மாத காலம் கடுமையான பயிற்சி அளிக்கப்படும்’’ எனவும் போர்ன்ஹப் நிறுவனம் அறிவித்துள்ளது.