மர அலமாரியை வெள்ளை வினிகர் கொண்டு பருத்தித் துணியால் துடைக்க வேண்டும். பஞ்சில் வெள்ளை வினிகரைத் தோய்த்து அழுத்தி எடுத்தால், அலமாரி ஓரங்களில் இருக்கும் அழுக்கும் வந்துவிடும்.
ஃப்ரிட்ஜுக்கும் அடுப்புக் கும் இடைவெளி அதிகம் இருக்க வேண்டும். இல்லையெனில், அடுப்பு வெப்பத்தையும் மீறி குளிரூட்டும் பணியை செய்ய வேண்டியிருப்பதால், மின்சாரம் அதிகம் செலவாகும்.
வார்ட்ரோபில் துணிகளை அடுக்கும்போது, கறுப்புக்கு அடுத்து அடர் நீலம், `பிங்க்’குக்கு அடுத்து சிவப்பு என்று அடுக்காமல், கான்ட்ராஸ்ட் நிற ஆடைகளை அடுத்தடுத்து அடுக்கினால் எந்த ஆடையும் மறைந்துபோகாமல் பளிச் எனத் தெரியும்; எடுக்கச் சுலபமாக இருக்கும்.
பாத்ரூம் டைல்ஸ்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறையை நீக்க, எலுமிச்சைச் சாற்றை தண்ணீரில் கலந்து தெளித்து 10 நிமிடத்துக்குப் பிறகு, வழக்கமாக பயன் படுத்தும் கிளீனர் கொண்டு தேய்த்தால் மஞ்சள் கறை முற்றிலும் நீங்கும்.
படுக்கை அறையில் அலங்காரச் செடிகள் வளர்ப்பது, அழகையும், ஒருவித மன அமைதியையும் தரும்.
காலணிகளை வீட்டுக்குள் வைத்துப் பூட்டாமல், வெயில் படும் இடத்தில் வைத்தால் கிருமிகள் பரவாது.
வீட்டில் செல்லப் பிராணிகளை வைத்திருக்கும் இடத்தில் வரும் துர்நாற்றத்தைத் தவிர்க்க, ஒரு கிலோ பேக்கிங் சோடாவை அங்கு கொட்டி, 20 நிமிடங்கள் கழித்துத் தேய்த்தால், நாற்றம் மறையும். வாரம் இரு முறை இப்படிச் செய்யலாம்.