பிரிட்டனில் உள்ள ஆஸ்டான் பிசினஸ் ஸ்கூலில், முழுநேரமாக எம்.பி.ஏ., படிக்க விரும்பும், தகுதியுள்ள இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை அளவு: கல்விக் கட்டணத்தில் 5 ஆயிரம் யூரோ.
தேர்வு முறை: இளநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. கல்வி, பணி அனுபவம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் இந்திய மாணவர்கள் உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 28.
விரிவான விபரங்களுக்கு: www.aston.ac.uk/mbaindia