அர்ச்சகருக்கு அங்க லட்சணம் ஏன் அவசியம் ? (விளக்கம்)
“ஆபிரூப்யாச்ச மூர்த்தீனாம் தேவ: ஸான்னித்யம்ருச்சதி” என்பதாக, ஆலயங்களில் தெய்வ உருவங்களை (சில்ப) சாஸ்திர முறைப்படி வடிவமைப்பதாலும்,
“அர்ச்சகஸ்ய ப்ரபாவேன சிலா பவதி கேவ:(ங்கர:). “என்பதாக, சிலைகளை ஆகம முறைப் படி ப்ரதிஷ்டை செய்து பூஜைகள் செய்யப் படுவதாலும், வருடாவருடம் திருவிழாக்கள் நடத்தப் படுவதாலும் தெய்வங்களுக்கு அருட்சக்தி ஸித்திக்கிறது,
(தீக்ஷை பெற்று) ஆகமப் ப்ரயோகங்கள் கற்று, அங்க லட்சணத்தோடு முறையாக, தெய்வங்களை பூஜை செய்யும் அர்ச்சகர்கள் தெய்வ அருளை மக்களுக்கு பெற்றுத்தருபவர்கள் என்றும், புயல் வெள்ளம், போன்ற ஆபத்தான காலங்களிலும் பூஜைகளை தவறாது செய்து வரும் இவர்கள், பொதுமக்களுக்காக ஆற்றும் பணி மிகவும் போற்றத்தக்கது, என்று ஆகமங்கள் அர்ச்சகர்களின் பெருமைகளைச் சொல்லி இருக்கின்றது. ….ஆனால் இன்றைய அரங்கன் ஆலய அர்ச்சகர்களின் ஆகம அறிவின்மை (lack of proper agama education, no formal process etc.,), அவர்கள் ஆகமங்களுக்கும், அரங்கனுக்கும், ஆலய பழக்க வழக்கங்களுக்கும் கொடுக்கின்ற மரியாதையை எங்கே போய் சொல்வது ….
அர்ச்சகன் அரங்கனுக்கு (பகவானுக்கு)பூஜையை செய்ய தொடங்கும் போது, முதலில் தன்னுடைய சரீரத்தில், தன்னுடைய அங்க, உபாங்க நியாசங்களை செய்ய வேணும் ….பின்வரும் மந்திரங்களைச் சொல்லி, முதலில் தன்னுடைய சரீரத்தில் பகவானை ஆவாஹணம் பண்ணிக் கொண்டு, அதன் பிறகுதான், மூலஸ்தானத்தில் உள்ள விக்ரஹத்திற்கும், தன்னுடைய அங்கங்களில் சொன்ன, அதே மந்திரங்களைச் சொல்லி பூஜிக்க வேண்டும் …
அர்ச்ச்கனுடைய சரீரத்தில் குடுமி (சிகை)இல்லை என்றால் , அர்ச்சகன் அந்த மந்திரத்தினைச் சொல்லி எங்கு தொட்டுக் கொள்வான் ???????
அர்ச்ச்கனுக்கே குடுமி இல்லாத பொழுது , அவன் பூஜிக்கும் பகவானுக்கு எப்படி அந்த பாகத்தில் ஆவாஹணம் செய்து, சாந்நித்யம் ஏற்படும் ???????
பின்வரும் மந்திரங்களைச் சொல்லி அர்ச்சகன் ,
ஓம் ஜ்ஞானாய ஹ்ருதயாய நம : (என்று ஹ்ருதயத்தையும் )
ஓம் ஐஸ்வர்யாய ஸிரசே ஸ்வாஹா (என்று சிரசையும் )
ஓம் ஸக்த்யை ஸிகாயை வஷட் (என்று குடுமியையும் )
ஓம் பலாய கவசாய ஹும் (என்று இரு புஜங்களையும் )
ஓம் வீர்யாய அஸ்த்ராய பட் (என்று கரங்களின் மத்தியத்தையும் )
ஓம் தேஜஸே நேத்ராப்யாம் வௌஷட் (என்று கண்களையும் )
ஓம் ஜ்ஞானாய உதராய நம: (என்று வயிறையும் )
ஓம் ஐஸ்வர்யாய ப்ருஷ்டாய நம : ( என்று பிருஷ்டங்களையும் )
ஓம் ஸக்த்யை பாஹுப்யாம் நம : (என்று தோள்களையும் )
ஓம் பலாய ஊருப்யாம் நம : (என்று தொடைகளையும் )
ஓம் வீர்யாய ஜானுப்யாம் நம : (என்று முழங்கால்களையும் )
ஓம் தேஜஸே பாதாப்யாம் நம : ( என்று பாதங்களையும் )
தொட்டுக் கொள்ள வேணும்…அதன் பிறகு இதே மந்திரங்களைச் சொல்லி, அரங்கனுக்கும் நியாசாதிகளை செய்ய வேணும் ….(இவை போல இன்னும் ஏராளமான மந்திரங்கள் உண்டு .இது வெறும் ஆரம்ப மந்திரம் மட்டுமே )
ஆக முதல் கோணல் முற்றிலும் கோணல் தானே ….அங்க லட்சணம் இல்லாதவன், அர்ச்சகன் ஆக முடியாது, அவன் ஆராதனமும் செய்யக் கூடாது …இதில் ஆகமம் படித்த எந்த அர்ச்ச்கருக்காவது மாற்றுக் கருத்து இருந்தால் மறுப்பு தெரிவுக்குமாறு தெரிவிக்கின்றேன் …
கல்யாணம் செய்திருந்தால் மட்டுமே, அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்யமுடியும், காப்பு கட்டி, உற்சவங்களை நடத்த முடியும் என்று தெரிந்த அர்ச்சகனுக்கு, கல்யாணம் ஆனவுடன் பஞ்சகச்சம் கட்டிக் கொள்ள தெரிந்த அர்ச்சகனுக்கு, சிகை (குடுமி) இல்லாமல் பூஜை செய்யக் கூடாது, குடுமி இல்லாதவன், ஆகமப்படி அரங்கனை பூஜிக்க அருகதை அற்றவன் என்பது தெரியாதோ ?
அங்க லட்சணம் என்பது ஆகமத்திற்கும், பூஜை செய்யும் பகவானுக்கும், ஆலயத்தின் புனிதத்திற்கும் அவசியம் என்பது தெரியாமளா? அர்ச்சகர் என்று சொல்லிக் கொண்டு, கேவலம் பணத்தினை சம்பாரிக்க ஆலயத்திற்கு வருவதோடு, அடுத்த தலைமுறைக்கும், அசிங்கமான முன்னுதாரணமாக இருக்கின்றீர்கள் ….
ஒரு அர்ச்சகன் என்பவன் முதலில் தன்னுடைய தேகத்தில், ஒவ்வொரு பாகங்களையும், அந்தந்த, பாகங்களுக்கு,உரியஆகம மந்திரங்களைசொல்லித் தொட்டுக்கொண்டு, அதன்பிறகே எம்பெருமானை மனதில் தியானித்து, பிறகு ஆலயத்தின் விக்ரகத்தின் ஒரு ஒரு பாகத்தையும், அந்தந்த அங்கங்களுக்கு உண்டான, மந்திரங்களைச் சொல்லி தொடுவதனால் தான், அந்த விக்ரஹத்திற்கும் சாந்நித்யம் உண்டாகின்றது என்று, பாஞ்சராத்ர ஆகமம் தெளிவாக சொல்கிறது …
ஆனால் கேவலம், நிச்சயம் ஒருநாள் அழியப் போகின்ற சரீரத்தின் அழகிற்காகவும், இந்த நாகரீக உலகின் நிலையில்லாத வாழ்க்கைக்காகவும், அனாதிகாலமாய் அழியாமல் பாதுகாத்த ஆகமங்களை, அதன் விதிகளை மதிக்காமல், அங்க லட்சணம் இல்லாமல், அரங்கனை ஆராதிப்பது தவறு என்பதை உணராத, அர்ச்சகர்கள் என்ன அவசியத்துக்கு, அரங்கனுக்கு ஆராதனங்கள் செய்ய, அவனுடைய உற்சவங்களுக்கு காப்பு கட்டிக் கொண்டு, உற்சவத்தினை தலைமையேற்று நடத்த வேண்டும் ….
கேவலம் பணத்திற்காக, அலுவலகத்திற்கு வேலைக்கு போகும் போது, அதற்கு உண்டான உடையில் போகத் தெரிந்த உங்களுக்கு,(maintaining the dress code i.e., uniform discipline while going to BHEL duty, going to Axis bank duty with full trouser and shirt) பராமத்மாவான அரங்கனை ஆராதிக்கும் அர்ச்சக குடும்பத்தில் பிறந்த உங்களுக்கு, அங்கலட்சணம், ஆச்சார அனுஷ்டானம், ஆகம அறிவு இல்லாமல், அரங்கனை தொடக் கூடாது என்று , தெரியாமல் போனது கேவலமே ….. (in temple, there is no Human Resources department to take disciplinary action against code of conduct, Archagas think they are the kingpin, no one can question them … which is true after Mrs. Kavitha Madam’s tenure none of the Executive officers/Joint Commissioner has influence on the Archagas.)
பிச்சை எடுப்பவனும் பணம் தான் சம்பாரிக்கின்றான் … உங்களின் நோக்கம் பணம் தான் என்று இருந்தால், அதற்கு தாராளமாக கோயில் வாசலில் அமர்ந்து ,எந்த லட்சணமும் இல்லாமல் பிச்சை எடுக்கலாம் …(பிச்சை எடுப்பதற்கு எந்த லட்சணமும் தேவை இல்லை )
அர்ச்சகன் என்றால் ஆகமத்தை மதிக்க வேண்டும், படிக்க வேண்டும், ஆகமத்தின் படி வாழ வேண்டும், பூஜிக்க வேண்டும் …
குடுமி இல்லாமல் நீங்கள் என்ன மந்திரம் சொன்னாலும், அது அரங்கனுக்கும், ஆகமத்திற்கும் ஏற்புடையது அல்ல ..முறையும் அல்ல …இது தெரியாமல் அர்ச்சகர்களாக பெருமைப் பட்டுக் கொள்வது, உங்களுக்கும், அரங்கனுக்கும் அவனின் பெருமைக்கும் இழுக்கே ……
இதே அரங்கத்தில் உள்ள ஆகமப் பாடசாலையில், பயின்று வரும் சிறுவர்கள், அங்க லட்சணத்துடன், ஆச்சார அனுஷ்டானத்துடன், ஆகமங்களை முறையாக பயின்று வருவது உங்களுக்கு தெரியாதா ???
அவர்கள்தான் அர்ச்சகர்கள் என்று சொல்லிக் கொள்ள முழுமையான தகுதி உடையவர்கள் ..கேவலம் பணத்திற்காக, அங்க லட்சணம் இல்லாமல், ஆச்சார அனுஷ்டானம் இல்லாமல், ஆகம அறிவு இல்லமால், அனாச்சார பிண்டங்களாய் வாழும் நீங்கள் அர்ச்ச்கர்களா ???
நமது கலாச்சாரத்தை வெளிப்படுத்துபவை நமது ஆலயங்களே. ஒவ்வொரு ஊரிலும் பற்பல தெய்வ ஆலயங்கள், கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று போன்ற பழமொழிகளும் ஆலயங்களின் பெருமைகளை நமக்கு எடுத்துரைக்கின்றன,
ஆனால் தற்காலத்தில் சில அர்ச்சகர்கள், தாங்களது பெருமைகளை முழுமையாக உணராததால், உலகத்துடன் (நாகரிகத்துடன்) கலந்து விடுகின்றார்கள், இவர்களும் தாங்களது தகுதியை உணர்ந்து, வேதம், ஆகமம், ஆகியவற்றில் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம்,
அபிஷேகம், தீபாராதனை போன்ற காலங்களில், வேத மந்திரத்தை ஸ்வர சுத்தத்துடன் சொல்ல, வேதத்தை முறையாக கற்றுக்கொள்ளுதல் அவசியம். இவற்றுடன் ஆசாரமும் (தூய்மை) அவசியம், முச்சந்தியில் அமைந்திருக்கும் விநாயகரை பூஜிக்கக்கூட ஆசாரம் தேவை.
மக்கள் ஆலயத்தை நாடுகிறார்கள், தெய்வத்தை நம்புகிறார்கள், தெய்வ ஸான்னித்யம் அர்ச்சகர்களின் கையிலுள்ளது, ஆலயங்களில் பூஜிக்கும் ஆகம முறைகளை கற்று, ஆகமப் படியும், ஆச்சார அனுஷ்டானத்தின்படியும், அரங்கனை பூசிப்பது அர்ச்சகரின் முக்கியமான கடமையாகும் ..ஆலய தெய்வத்தின் அருளை மக்களுக்குப் பெற்றுத் தரும் பாக்யத்தைப் பெற்றுள்ள அர்ச்சகர்கள், ஆலயத்தில் ஆசாரத்தோடும் ச்ரத்தையோடும் பூஜை செய்யவும் வேத மந்திரங்களை ஸ்வர சுத்தத்துடன் சொல்லவும் அரங்கன் அனுக்ரஹிக்கட்டும்.
நம்பெருமாளின் வசந்த உற்சவத்தில் காப்பு கட்டிய அர்ச்சகர் எந்த பாடசாலையில் வேதம், ஆகமம் பயின்றார்? எந்த வித முறையான அர்ச்சகர் தகுதிக்கான படிப்பு அறிவு இல்லாமல் பரம்பரை என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் வந்தவர் தானே? இந்த அர்ச்சகர்,(just a young youth without any formal qualification on agama and vedas) வயதில் மூத்த பரிசாரகர் களை ஒருமையில் அழைப்பது (போடா, வாடா …) – இவர்களிடம் எந்த ஆச்சார அனுஷ்டானம் இருக்கும் ? காசுக்காக முறை பார்க்கும் அர்ச்சகர் கூட்டம் – அரங்கனே எல்லாம் உனது லீலைகள் ??? ஸ்ரீ ரங்கா! ஸ்ரீ ரங்கா! ஸ்ரீ ரங்கா!