கின்னஸ் சாதனை திருமணம்: தம்பதிகளின் கூட்டு வயது 194

கின்னஸ் சாதனை திருமணம்: தம்பதிகளின் கூட்டு வயது 194

[carousel ids=”66111,66112,66113″]

உலகில் நிகழ்ந்த இதற்கு முந்தைய சாதனைகளை அனைத்தையும் முறியடிக்கும் வகையில் தெற்கு இங்கிலாந்து நாட்டில் உள்ள ஈஸ்ட்போர்ன் என்ற நகரை சேர்ந்த 103 வயது ஆண் ஒருவரும் 91 வயது பெண் ஒருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரின் வயதுகளின் கூட்டுத்தொகை 194 என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 27 ஆண்டுகளாக லிங்க் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ்ந்துவந்த ஜார்ஜ் கிர்பி  என்ற 103 வயது நபர் 91 வயது டோரீன் லக்கி என்பவரை நேற்று மாலை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.  லிவிங் டுகெதர் முறையில் வாழும்போதே இவர்களுக்கு ஏழு பிள்ளைகள், 15 பேரப் பிள்ளைகள் மற்றும் 7 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இவர்கள் நேற்று சர்ச்சில் மோதிரம் மாற்றி தம்பதியராக மாறினர். என் மனைவியின் கையை பிடித்து முத்தமிடுவதற்காக முழங்காலிட்டு உட்கார எனக்கு துணிச்சல் இல்லை. ஏனென்றால், முழங்காலிட்டு உட்கார்ந்தால் மீண்டும் எழுந்திருப்பேனா? என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை என்று கூறி இந்த திருமணத்தை வாழ்த்த வந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தினார், மணமகன் ஜார்ஜ் கிர்பி.

இந்த திருமணத்தின் மூலம் மிக அதிகமான வயதான காலத்தில் திருமணம் செய்து கொண்ட 191 வயது ஜோடியான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிராங்கோயிஸ் பெர்னாண்டஸ் – மேடலெய்ன் பிரான்சினியூ தம்பதியரின் முந்தைய கின்னஸ் சாதனையை 194 வயது ஜோடியான ஜார்ஜ் கிர்பி – டோரீன் லக்கி தம்பதியர் முறியடித்துள்ளனர்.

Leave a Reply