புலிகள் மீதான தடை நீக்கமா? இலங்கை வெளியுறவு அமைச்சர் தகவல்

mangala-samaraweera1இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமீபத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செய்தார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அவர் உலகத் தமிழர் பேரவை மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களுடன் முக்கிய பேச்சு நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகள்  மீதான தடையை நீக்குவது குறித்து பேசியதாக ஒருசில ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து இந்த பேச்சு வார்த்தை தொடர்பாக பாரளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிரிபால டி சில்வா கேள்வி ஒன்றை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, “”விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து தமிழ் அமைப்பை சார்ந்தவர்களுடன்  பேசவில்லை. ஆனால் புலம்பெயர் குழுக்கள் இலங்கையில் வன்முறையை கைவிட்டுவிட்டு நாட்டின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் துணைபுரிவார்கள் என்ற நம்பிக்கை இந்த பேச்சுவார்த்தையின் மூலம் எனக்கு புரிந்தது’ என்று கூறியுள்ளார்.

சிறிசேனா தலைமையிலான புதிய ஆட்சி இலங்கையில் வந்தாலும் புலிகள் மீதான தடை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply