விக்ரம் தற்போது நடித்து வரும் 10 எண்றதுக்குள்ள’ திரைப்படத்தை அடுத்து அரிமா நம்பி பட இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 20ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் என்று கூறப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும், முதலில் இந்த படத்தை தயாரிப்பாளர் தாணுவின் சகோதரர் தயாரிப்பதாக இருந்ததாகவும், தற்போது ஐங்கரன் நிறுவனத்துக்கு செய்யலாம் என்று விக்ரம் விரும்பியதால் அந்த நிறுவனம் இந்தப்படத்தைத் தயாரிக்கப் போவதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த படத்தின் கதை உருவாக்கத்தில் தாணுவின் சகோதரர் பங்கு இருந்ததால் அவரிடம் அனுமதி பெற்றுவிட்டு படத்தை தொடங்குவதற்காக படக்குழுவினர் காத்து கொண்டிருப்பதாகவும், தாணுவின் சகோதரர் இந்த திடீர் மாற்றத்திற்கு சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்திற்காக விக்ரம் ஸ்பெஷலாக தாடி எல்லாம் வளர்த்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பு நடக்குமா? இல்லையா? என்பது குறித்து குழப்பமான சூழ்நிலையே நிலவி வருகிறது.