என்னென்ன தேவை?
முள்ளங்கி – 200 கிராம்
கோதுமை மாவு – அரை கிலோ
பச்சை மிளகாய் – 5
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவைக்கு
எப்படிச் செய்வது?
கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்துச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். முள்ளங்கியைத் தோல் சீவி, துருவிக்கொள்ளவும். துருவியதை நன்றாகப் பிழிந்து, அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கரம் மசாலா, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.
பிசைந்து வைத்திருக்கும் மாவைச் சப்பாத்தியாகத் தேய்த்து, நடுவே முள்ளங்கிக் கலவையை வைத்து மூடி, தேய்க்கவும். இதைச் சூடான தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு மிதமான தணலில் சுட்டெடுக்கவும். உள்ளே இருக்கும் முள்ளங்கி வேகும் வரை வேகவிடவும். தயிர்ப் பச்சடியுடன் இதைச் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.