வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

ecதேர்தல் நடைபெறும்போது பல வித முறைகேடுகளை தடுக்க வாக்காளர்களை கெடுபிடி செய்யும் தேர்தல் ஆணையம் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கு என்னவிதமான நடவடிக்கை எடுத்துள்ளது என்ற தகவல் பெறும் உரிமை மூலம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அதற்குரிய அதிகாரம் தங்களுக்கு இல்லை என தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

வாக்காளர்கள் பணம் வாங்கக்கூடாது, தேர்தல் விதிமுறைகளை மீறக்கூடாது, என பல கெடுபிடிகளை வாக்காளர்களும், வேட்பாளர்களுக்கும் செய்யும் தேர்தல் ஆணையம், தேர்தலின் போது அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்தால் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேளவி ஒன்று தகவல் பெறும் உரிமை மூலம் சமீபத்தில் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், ‘“தேர்தலின்போது அளிக்கப்படும் வாக்குறுதியை ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றத் தவறும் அரசியல் கட்சி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சட்ட ரீதியாக அதிகாரம் இல்லை. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்து தேர்தல் வாக்குறுதி தொடர்பாக விதிமுறைகளை வகுக்குமாறு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. எனினும் இதுதொடர்பாக இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை” என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply