சர்வீஸ் டாக்ஸ்… எந்த சேவைக்கு எவ்வளவு வரி?

p26a

ந்தியாவில் எதற்குப் பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ, மக்களை இம்சிக்கும் வரிகளுக்குப் பஞ்சமில்லை.மத்திய அரசு வசூலிக்கும் வரி இரண்டு வகைப்படும்.ஒன்று, நேரடி வரி, மற்றொன்று மறைமுக வரி. நாம் செலுத்தும் சேவை வரி, இரண்டாவதாக வரும்  மறைமுக வரிகளில் முக்கியமான ஒன்று. 2014 -15ம் நிதியாண்டில் மத்திய அரசின் நிகர வரி வருமானம் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய், அதில் சேவை வரி மட்டும் 1.68 லட்சம் கோடி ரூபாய் (நிகர வரி வருமானத்தில் சுமார் 20%). இந்த நிதியாண்டில் (2015-16)-ல் அரசு மக்களிடமிருந்து சேவை வரியாக வசூலிக்கத் திட்டமிட்டிருக்கும் மொத்த தொகை 2,09,774 கோடி ரூபாய். இதனால் ஏற்கெனவே 12.36 சதவிகிதமாக இருந்த சேவை வரி, ஜூன் 1-ல் இருந்து 14 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சேவை வரி எந்த சேவைகளுக்கெல்லாம் வசூலிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆடிட்டர் பி.ராஜேந்திர குமாரை அணுகினோம். அவர் அளித்த விளக்கம் இதோ…

எந்த சேவைகளுக்கு வரி?

இந்தியாவின் சேவை வரி 1997-ம் ஆண்டு ஜூலை 01-ம் தேதியிலிருந்து வசூலிக்கப்படுகிறது. முதலில் தொலைப்பேசி, பங்கு பரிவர்த்தனைகள், இன்ஷூரன்ஸ் போன்ற சேவை களுக்கு மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த சேவை வரி, தற்போது 119 சேவைகளுக்கு வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், எந்தச் சேவைகளுக்கெல்லாம் சேவை வரி வசூலிக்கலாம் என்று சொல்ல வேண்டிய அரசு, கொஞ்சம் வித்தியாசமாக எந்தச் சேவைகளுக்கெல்லாம் சேவை வரி கிடையாது என்று சொல்லி இருக்கிறது. அதாவது, நிதிச் சட்டம் (ஃபைனான்ஸ் ஆக்ட்) பிரிவு 66D மற்றும் அறிவிப்பு எண். 25/2012-ST (Notification No.25/2012-ST) ஆகியவற்றில் தரப்பட்டுள்ள சேவைகளுக்கு மட்டும்தான் சேவை வரி கிடை யாது. இந்தப் பட்டியலில் வராத சேவைகள் அனைத்தும் அரசு விதித்திருக்கும் 14 சதவிகித சேவை வரிக்கு உட்பட்டது.

எதற்கு எவ்வளவு வரி?

அரசாங்கமானது, எந்தச் சேவைகளுக்கு எவ்வளவு தொகை சேவை வரியாக வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது. உதாரண மாக, ஓர் ஏ.சி உணவு விடுதிக்குச் செல்கிறீர்கள். உங்கள் மொத்த பில்லின் மதிப்பு 1,000 ரூபாய். இதில் 60 சதவிகித தொகை அதாவது, 600 ரூபாய் சேவை வரிக்கு உட்படாது. மீதமுள்ள தொகையான 400 ரூபாய்க்கு 14 சதவிகிதம் சேவை வரி கணக்கிடப்பட்டு 56 ரூபாய் சேவை வரியாக வசூலிக்கப்படும். இந்த 56 ரூபாய் பில்லின் மொத்த தொகையான 1,000 ரூபாயில் 5.6 சதவிகிதம் ஆகும்.

இப்படி சில சேவைகளுக்கு/பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் சேவை வரிக்கு கணக்கிடப்படாது. விலக்கு வழங்கப்படும் தொகைக்கு `அபேட்மென்ட்’ என்று பெயர். இந்த அபேட்மென்ட் போக பாக்கியுள்ள தொகைக்கு 14% சேவை விரி வசூலிக்கப்படும்.  வாசகர்களின் வசதியை கருத்தில் கொண்டு பில்லின் மொத்த தொகையில் எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்று அட்டவணையில் கொடுத்திருக்கிறோம்.(பார்க்க அட்டவணை)

இதற்குமேல் வரி வசூலிப்பது தான் கூடுதல் சேவை வரி வசூலிப்பதாகும். அட்ட வணையில் தரப்பட்டிருக்கும் சதவிகிதத்துக்குமேல் ஒரு நிறுவனம் அல்லது சேவை வழங்குபவர் கூடுதலாகச் சேவை வரி வசூலித்தால் 

commr-st1chn@nic.in,

commr-st2chn@nic.in,

commr-st3chn@nic.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு ஆதாரங்களுடன் அனுப்பலாம்.

 விதிமுறைகளை எங்கே தெரிந்துகொள்வது?

சேவை வரி தொடர்பாக கூடுதல் விவரங்கள், புதிய விதிமுறை மாற்றங்கள் போன்ற வற்றை அதிகாரப்பூர்வமாகத் தெரிந்துகொள்ளhttp://servicetax.gov.inலிங்கைச் சொடுக்குங்கள். மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருவாய் துறையின் வலைத்தளத்தில், சேவை வரி தொடர்பான அத்தனை விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்’’ என்று முடித்தார் ராஜேந்திர குமார்.

Leave a Reply