அஜீத் நடித்து வரும் ‘தல 56’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சென்னையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் வில்லன் கபீர்சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் பிரமாண்டமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 25 நாட்கள் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் சிறுத்தை சிவா முடிவு செய்துள்ளார். இந்த படப்படிப்புடன் 50% படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நான்காவது கட்ட படப்பிடிப்பு மஸ்கட் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் நடக்கவிருப்பதாகவும் இதற்காக லொகேஷன் பார்ப்பதற்காக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவர்கள் உதவி இயக்குனர்களுடன் துபாய் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது. துபாய் மற்றும் மஸ்கட் ஆகிய பகுதிகளில் ஒருசில இடத்தை தேர்வு செய்து முடித்துவிட்ட ஏ.எம்.ரத்னம், விரைவில் சென்னை திரும்பவுள்ளார். நான்காவது கட்ட படப்பிடிப்பு துபாயில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. அஜீத் மற்றும் ஸ்ருதிஹாசனின் டூயட் பாடல் ஒன்றும் துபாயில் படமாக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.