சபரிமலை: ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை நடை திறந்தது. இன்று முதல் ஐந்து நாட்கள் பூஜைகள் நடைபெறும்.நேற்று மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது.
வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.இன்று அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்யபூஜைகளுக்கு பின்னர் நெய்யபிஷேகம் ஆரம்பமாகும். வரும் 20-ம் தேதி வரை எல்லா நாட்களிலும் உதயாஸ்தமனபூஜை, களபபூஜை, இரவு ஏழு மணிக்கு படிபூஜை ஆகியவை நடைபெறும். 20-ம் தேதி பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படுகிறது. அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.