கூகுள் சர்ச் லைட் மூலம் நான்கு மடங்கு வேகமாக தேடல்களை மேற்கொள்ள முடியும் என கூகுள் அறிவித்திருக்கின்றது. இந்த புதிய முறை இந்தியாவில் இந்த மாதம் முதல் செய்லபட துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மொபைலில் இண்டர்நெட் பயன்படுத்தும் போது அதன் வேகம் குறைந்தால் புதிய அம்சம் தானாக பக்கங்களை எளிமையாக்குவதோடு இதன் மூலம் பக்கங்கள் லோடு ஆகும் வேகத்தையும் அதிகரிக்க முடியும் என கூகுள் நிறுவனத்தின் சர்ச் ப்ராடக்ட் மேனேஜர் ஹிரோடோ டொகுசெய் தெரிவித்தார்.
ஹாக்கர்களுக்கு ஆப்பு வைக்க சில ஐடியாக்கள்..!
இதே முறையை இந்தோனேஷியாவிலும் சோதனை செய்யப்பட்டது, அங்கும் பக்கங்கள் நான்கு மடங்கு வேகத்தில் லோடு ஆனதோடு 80 சதவீதம் வரை டேட்டா குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றது என்றும் ஹிரோடோ தெரிவித்தார். ஜூன் ஸ்பெஷல் – டாப் 10 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் கூகுளின் புதிய திட்டத்தின் மூலம் பதிப்பாளர்கள் 50 சதவீதம் கூடுதல் லாபம் பெற முடியும் என்று கூகுள் தெரிவித்தாலும் தற்சமயம் இதன் மூலம் எவ்வித பயன்களும் இல்லை என்பதே உண்மை. இருந்தாலும் விரைவில் பதிப்பாளர்கள் லாபம் பெற வழி செய்யப்படும்.