சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள், அரசு செலவில் ரஷ்யாவுக்கு சென்று ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில், புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, ரஷ்யாவின், தேசிய டோம்ஸ் மாகாண பல்கலை மற்றும் யூரல் பெடரல் பல்கலையுடன், சென்னை ஐ.ஐ.டி., சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், தனியார் கல்லூரிகளும், சுயநிதி பல்கலைகளும் வெளிநாட்டிற்கு சென்று, கல்வி கற்கும் திட்டங்களை கொண்டு வந்துள்ளன. இதன் அடிப்படையில், சென்னை ஐ.ஐ.டி., நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள், பட்டப் படிப்பு காலத்தில், ரஷ்யாவுக்கு சென்று படிக்கவும், அங்குள்ள மாணவர்களை சென்னை ஐ.ஐ.டி.,க்கு அழைத்து வந்து படிக்க வைக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டு முயற்சி மாணவர்களுக்கு புதுமையானதாகவும், பயணளிக்கும் வகையில் அமையும் என்றும் சென்னை ஐஐடி.,யின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தப்படி, ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் ரஷ்யாவுக்கு சென்றும், ரஷ்யப் பேராசிரியர்கள் சென்னை ஐ.ஐ.டி.,க்கு வந்தும் பாடம் எடுப்பர் என, ஐ.ஐ.டி., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.