தேநீர் விருந்தில் கலந்து கொள்ள மகள்களுடன் லண்டன் சென்ற மிச்சேல் ஒபாமா.

[carousel ids=”66307,66308,66309,66310,66311,66312,66313,66314,66315,66316,66317″]

இங்கிலாந்து பிரதமர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மற்றும் மகள்கள் வாஷிங்டன் நகரில் இருந்து லண்டனுக்கு வந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். மகள்களுடன் வந்த மிச்சேல் ஒபாமாவுக்கு இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தேநீர் விருந்து அளித்து கெளரவிக்கப்பட்டது.

பின்னர் மிச்சேல் ஒபாமா இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இல்லத்திற்கு சென்றார். அங்கு அவருடைய மனைவி சமந்தா மற்றும் இளவரசர் ஹாரி ஆகியோர்களுடன் மீண்டும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்.

அதன்பின்னர்  டவர்ஹேம்லட்ஸில் உள்ள முல்பெர்ரி பள்ளிக்குச் சென்று பள்ளிக் குழந்தைகளை மிச்சேல் ஒபாமா சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பெண் கல்விக்கான முக்கியத்துவம் குறித்து மிஷல் ஒபாமா பேசினார். மிஷலின் வருகையையொட்டி பெண் குழந்தைகள் ஜிம்னாஸ்டிக் உட்பட பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

Leave a Reply