திருத்தணி: மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் அகத்தீஸ்வரர் கோவிலில், நேற்று சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தது.
திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், நேற்று மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் சிறப்பு ஹோமம் நடந்தது.
கோவில் வளாகத்தில் ஒரு யாக சாலை, ஐந்து கலசங்கள் வைத்து, சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு வண்ணமலர் அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.மழை வேண்டி சிறப்பு யாகம் செய்ததின் பயனாக நேற்று சில இடங்களில் மழை பெய்தது