ரஜினிமுருகன் அடுத்த எம்ஜிஆரா? வருண்மணியனை வருத்தெடுத்த லிங்குசாமி

lingusamyசிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினிமுருகன்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆவேசமாக பேசிய லிங்குசாமி, ‘ரஜினிமுருகன் அடுத்த எம்.ஜி.ஆரா? என்று கேள்வி கேட்ட வருண்மணியனுக்கு பதிலடி கொடுத்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் லிங்குசாமி தயாரித்த ‘உத்தம வில்லன்’ திரைப்படம் பிரச்சனையில் சிக்கியபோது, வருண்மணியன் தனது டுவிட்டரில், “மஞ்சப்பையோடு வந்தவர்கள் மஞ்சப்பையோடு போவார்கள் என்கிற பொருளிலும், ரஜினிமுருகன் அடுத்த எம்ஜிஆர் ஆகுமா என்கிற மாதிரியும் எழுதியிருந்தார். இது லிங்குசாமியை குறிவைத்தே எழுதப்பட்டது என்று அப்போதே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ரஜினிமுருகன் பாடல்வெளியீட்டு விழாவில் பேசிய லிங்குசாமி, “மஞ்சப்பையோடு வந்தவன் மஞ்சப்பையோடு போவான் என்பது போன்ற கமெண்ட்டுகள் வந்தன. ஆனால் நான் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டுவந்தவன், ஜி படத்துக்குப் பிறகுதான் சண்டக்கோழி படம் செய்தேன், பீமாவுக்குப் பிறகு பையா எடுத்தேன், எங்கள் நிறுவனத்தில் எடுத்த தீபாவளி, பட்டாளம் ஆகிய இரண்டுபடங்களும் ஓடாதநிலையில் நானே தயாரித்து இயக்கிய படம் பையா.

அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது துணைநடிகர்களுக்குச் சம்பளம் தரவில்லை என்பதற்காக மொத்தமாக எல்லோரும் கிளம்பிப்போக முடிவெடுத்த சம்பவமும் உண்டு. அவற்றையெல்லாம் கடந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்.

ரஜினியா எம்ஜிஆரா என்றெல்லாம் கேட்டார்கள், ரஜினியே பெரியவர் அதைவிடப் பெரியவரான எம்ஜிஆராக எங்களை ஆக்க நினைத்தற்குச் சந்தோசம்தான். இந்த ரஜினிமுருகன் படம் திட்டமிட்டபடி வெளிவரும், எட்டுக்குஎட்டு அறைக்குள் இருந்துதான் ஆனந்தம் படத்தை எடுத்தோம்.

அபிபுல்லாசாலையின் டிராபிக்குகளுக்கு மத்தியில்தான் ரன் கதையை எழுதினேன், உண்மையும் நேர்மையும் எந்நாளும் நம்மைக்காக்கும், சோதனைகள் வரும்போதுதான் நல்லவன் யாரு கெட்டவன் யாரு என்பதெல்லாம் தெரியவரும், நம்மைச் சுற்றிப்பார்த்துக்கொள்ள நிதானமாக விளையாட ஒரு வாய்ப்புக் கிடைக்கும், பிரச்சினை இல்லை என்று சொல்லவில்லை, இருக்கு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டுவருவோம்”

இவ்வாறு லிங்குசாமி பேசினார்.

Leave a Reply