உலகிலேயே ஈடிணையற்றது உணவுப்பொருள் தாய்ப்பால் என்பதை உலகம் முழுவதும் உள்ளவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது தாய்ப்பாலை வியாபாரமாக்கும் நிலை வந்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் வருத்ததுடன் கருத்து தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியும் மிகச்சிறந்த மருத்துவ குணமும் பெற்று வார5E0த்தைகளால் வர்ணிக்க முடியாத மகத்துவமும் நிறைந்த தாய்ப்பாலை தற்போது ஒருசில நாடுகள் வங்கிகளில் சேகரித்து வைத்துள்ளது. நாகரிக மாற்றத்திற்கேற்ப அனைத்தும் மாறிப்போன தற்காலத்தில் தாய்ப்பால் வங்கிகளும் ‘ஆன்லைன்’ மூலம் விளம்பரப்படுத்தி, வியாபாரத்தை பெருக்கி வருகின்றது.
தாய்ப்பால் வியாபாரமானது பிரசவத்தின்போது தாயை இழந்த குழந்தைகளை வாழ வைக்க மட்டும் முதலில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது உடற்கட்டை பெருக்கிக்காட்ட துடிக்கும் ஆணழகர்கள் மற்றும் தடகள வீரர்களும் பயன்படுத்த தொடங்கிவிட்டதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளது. அதிக வலிமையும், தெம்பும், உற்சாகமும் பெறுவதற்காக ஊக்கமருந்துகளுக்கு பதில் ஆன்லைன் மூலம் தாய்ப்பாலை வாங்கி தடகள வீரர்கள் பயன்படுத்தி வருவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலை தொடர்ந்தால், தாயில்லா குழந்தைகளுக்கு உதவிடும் நோக்கில் செயல்பட்டுவரும் இலவச தாய்ப்பால் வங்கிகளுக்கு எந்தப் பெண்ணும் தாய்ப்பாலை தானமாக தர முன்வர மாட்டார்கள் என்று அவர்கள் கருத்து கூறியுள்ளனர்.