பேஸ்புக் புதிதாக வெளியிட்டுள்ள மூமென்ட்ஸ்’ என்கிற ஆப் மூலம் செல்போனில் இருக்கும் கேமரா புகைப்பட தொகுப்பிலிருந்து நேரடியாக நூற்றுக்கணக்கான படங்களை பகிர்ந்து கொள்ள உதவுகிறது. இந்த புதிய பயன்பாட்டில் முகத்தோற்றத்தை கண்டறியும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் செல்போனில் இருக்கும் கேமரா புகைப்பட தொகுப்பிலிருந்து படத்தை டேக் செய்யும் போது, இந்த ஆப் புகைப்பட தொகுப்பை ஸ்கேன் செய்து குறிப்பிட்ட நண்பரின் புகைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுக்க வழி செய்கிறது.
மூமென்ட்ஸ் ஆப் மூலம் தொகுக்கப்பட்ட படங்களை நண்பர்களுக்கு அனுப்பலாம். அந்த நண்பரும் மூமென்ட்ஸ் ஆப் வைத்திருந்தால், அதை பயன்படுத்தி படங்களை பார்க்க முடியும். அப்படி இல்லை என்றால் அவரின் பேஸ்புக் மெசேஞ்சரில் இருந்து ‘மூமென்ட்ஸ்’ காத்திருப்பதாக தகவல் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.