பின்லேடன் கொல்லப்படவில்லை. அமெரிக்கா-பாகிஸ்தானின் நாடகம் அம்பலம்?

binladenஅல்கொய்தா அமைப்பின் தலைவரான பின்லேடனை கொலை செய்து விட்டதாக அமெரிக்காவும் பாகிஸ்தானும் சேர்ந்து நாடகமாடுகின்றன. உண்மையில் பாகிஸ்தான் அமெரிக்காவிடம் பின்லேடனை உயிருடன் ஒப்படைத்துவிட்டதாக பின்லேடனின் அல்கொய்தா குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வரும் பிரிட்டன் செய்தியாளரும், ஆவணப் படத் தயாரிப்பாளருமான ஜேன் கார்பின் என்பவர் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார் நகரில் உள்ள இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குக் காரணமான அல்-காய்தா அமைப்பின் தலைவர் பின்லேடனை அமெரிக்கா பல ஆண்டுகளாகத் தேடி வந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, அந்த நாட்டின் அப்போட்டாபாத் நகரில் பதுங்கி இருந்த பின்லேடனை கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்க சிறப்பு அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளிவந்தது. கொலை செய்யப்பட்ட பின்லேடனை கடலிலேயே அடக்கம் செய்துவிட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்தது.

ஆனால் இவை அனைத்துமே நாடகம் என்றும், உண்மையில் பின்லேடனை ஆறு ஆண்டுகளாக சிறை வைத்திருந்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு அவரை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டு, அதிரடி நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டதைப் போல இரு நாடுகளும் நாடகமாடி உலகை நம்பச் செய்ததாக ஜேன் கார்பின் கூறியுள்ளார். ஜேன் கார்பின் எந்த அளவுக்கு உண்மை என்று சமூக வலைத்தளங்களில் தீவிரமாக விவாதம் நடைபெற்று வருகிறது.

Leave a Reply