இயக்குனரின் தலையை கொண்டு வந்தால் 51 எருமைகள் பரிசு. ‘காப்’ அமைப்பு அறிவிப்பு

beheadபிரபல பாலிவுட் இயக்குனர் ஒருவரை கொலை செய்து அவருடைய தலையை கொண்டு வந்தால் 51 எருமைகள் பரிசாக அளிக்கப்படும் என ஒரு அமைப்பு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் வினோத் கப்ரி, உண்மைச்சம்பவங்களை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் “Miss Tanakpur Haazir Ho. இந்த படம் வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரில்  மாட்டை பலாத்காரம் செய்துவிட்டதாக இளைஞன் ஒருவன் தண்டிக்கப்படுவதும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.  இதுபோன்ற சம்பவம் ஒன்று வட இந்திய மாநிலம் ஒன்றில் சமீபத்தில் நடந்துள்ளதால் அந்த மாநிலத்தின் ஒரு அமைப்பான “காப்” என்ற அமைப்பை குறித்துதான் இந்த காட்சி எடுக்கபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காப் அமைப்புக் குழுவின் தலைவர் ராஜூ அகலாவத் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “வினோத் கப்ரியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு 51 எருமைகள் பரிசு தரப்படும் என்றும், தங்களை இழிவாக சித்தரிக்கும் இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு நாடு முழுவதையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply