ஜெயலலிதாவுக்கு பாகிஸ்தான் தொலைக்காட்சி பாராட்டு.

jayaஇன்றுமுதல் ரமலான் நோன்பு தொடங்குவதை அடுத்து ரம்ஜான் நோன்புக்கஞ்சி தயாரிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மசூதிகளுக்கு இலவச அரிசி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள இஸ்லாமிய மக்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்திருக்கும் நிலையில் இந்தியாவின் எதிரி நாடு என்று கருதப்படும் பாகிஸ்தான் நாட்டின் தொலைக்காட்சி சானல் ஒன்றும் ஜெயலலிதாவை பாராட்டியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

“ரம்ஜான் புனித மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க தமிழக அரசு மசூதிகளுக்கு இலவச அரிசித் திட்டத்தை கொண்டு வந்துள்ளதற்காக முதல்வர் ஜெயலலிதாவை பாகிஸ்தான் தொலைக்காட்சி சானலான SAAMA பாராட்டியுள்ளது. தங்கள் நாட்டு அரசும் தமிழக அரசின் இந்த திட்டத்தை பின்பற்ற அந்த சானல் வலியுறுத்தியுள்ளது”

மேலும், ஒரு செய்தித்தாளும் அந்த சானலின் வீடியோவிலிருந்து எடுத்த ஜெயலலிதாவின் படத்தை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் செய்தி ஏஜென்சி ஒன்றின் செய்தியின் அடிப்படையில் இந்த செய்தியை ஒளிபரப்பியதாக அந்த சானல் தெரிவித்துள்ளது. இந்த தகவல் அதிமுகவின் நாளேடான ‘நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் செய்தியாக வெளிவந்துள்ளது.

Leave a Reply