சிங்கவரம் அரங்கநாதர் கோவில் திருத்தேர் விழா!

LRG_20150619104844007993

செஞ்சி: செஞ்சியை அடுத்த சிங்கவரம் அரங்கநாதர் கோவிலில் 80 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திருத்தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிங்கவரம் மலை மீது, 700 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால அரங்கநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், இருந்த தேர் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்தது. இதனால் பல ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடக்காமல் இருந்தது. சில ஆண்டுகளாக தற்காலிக தேர் அமைத்து பிரம்மோற்சவம் நடத்தினர்.இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை உதவியுடன், 60 லட்சம் ரூபாய் மதிப்பில், 41 அடி உயரத்தில் புதிய தேர் வடிவமைத்து நேற்று தேர் திருவிழா நடந்தது.

இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் உற்சவருக்கு திருமஞ்சனமும், சாமி வீதி உலாவும் நடந்தது. 16ம் தேதி இரவு பெரிய திருவடி எனும் கருட சேவை நிகழ்ச்சி நடந் தது. நேற்று காலை முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது.இதை முன்னிட்டு காலை 8:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட பூதேவி, ஸ்ரீதேவி சமேத அரங்கநாதரை தேரில் ஏற்றினர். 9:00 மணிக்கு மங்கள வாத்தியம், செண்டை மேளம் முழுங்க திருத்தேர் வடம் பிடித்தல் துவங்கியது. மாட வீதிகள் வழியாக தேர் பவனி வந்த போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கா, கோவிந்தா சரண கோஷத்துடன் வடம் பிடித்தனர்.

இதில் புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேல், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், தி.மு.க., மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான், தே.மு.தி.க., மாவட்ட பொருளாளர் செஞ்சி சிவா, பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் அரங்க ஏழுமலை, சிங்கவரம் ஊராட்சி தலைவர் ரங்கநாதன், தேர் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் குணசேகர், ஏழுமலை, இளங்கீர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டன

Leave a Reply