டென்மார்க் தேர்தல்: முதல் பெண் பிரதமரை தோற்கடித்த எதிர்க்கட்சி.

denmarkடென்மார்க் நாட்டில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடித்து எதிர்க்கட்சியான டேனிஷ் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த கூட்டணிக்கு பெரும்பான்மைக்கு தேவையான 90 இடங்கள் கிடைத்துள்ளதால் ஆட்சியை பிடித்தது உறுதியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் வெற்றியின் மூலம் முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான லார்ஸ் லொக்கி ராஸ்முசேன் டென்மார்க்கின் அடுத்த பிரதமராக இன்னும் சில நாட்களில் பதவியேற்க உள்ளார். தேர்தல் முடிவுகள் வந்தவுடன், அவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியுடன் உரையாற்றினார்.

இந்த தேர்தலில் ஆளும் சமூக ஜனநாயக கட்சி மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தோல்வி அடைந்தது. மக்களின் முடிவை ஏற்றுக்கொண்ட பிரதமர் ஹெல்லி தோர்னிங்-ஸ்கிமிட் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். டென்மார்க்கின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்ற இவர், கடந்த 2011-ம் ஆண்டு முதல் பிரதமர் பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தோல்விக்கு பொறுப்பேற்று ஹெல்லி தோர்னிங்-ஸ்கிமிட் கட்சித்தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply