சென்னை மண்ணடி தபால் நிலையம் தெருவில் காளிகாம்பாள், கச்சாலீஸ்வரர் கோவில்கள் மற்றும் பள்ளிகளின் அருகே இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி பா.ஜனதா மகளிர் அணி சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு தலைமை தாங்கி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
பிரசித்தி பெற்ற காளிகாம்பாள், கச்சாலீஸ்வரர் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பெண்கள் தினமும் சாமி கும்பிடுவதற்காக வருகின்றனர். கொலம்பஸ், முத்தையா ஆகிய மேல்நிலைப்பள்ளிகளும், ஏராளமான கடைகளும் உள்ளன. இதன் அருகே டாஸ்மாக் மதுபானக்கடை இருப்பதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் மதுபானக்கடையில் மது வாங்குவதற்காக வரிசையில் நிற்பதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. குழந்தைகள் தவறான வழியில் செல்வதை தடுக்க மதுபானக் கடையை அரசு மூடவேண்டும்.
டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் போலீசார் தரப்பில் 15 நாட்களுக்குள் இந்த மதுபானக்கடை அகற்றம் செய்யப்படும் என்று உறுதிமொழி தரப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் மதுபானக்கடைகளை மூடும் வரை பா.ஜ.க. போராடும். போராட்டத்தின் தொடக்கம் தான் இது. உடலுக்கு தீங்கு என்ற உடன் நூடுல்ஸ் தடை செய்யப்பட்டிருக்கிறது.
அதுபோல கொலை, கொள்ளை, விபத்து, பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு காரணமாக இருக்கும் மதுவும் தடை செய்யப்பட வேண்டும். அரசு டாஸ்மாக்கில் மட்டும் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறது. 15 நாட்களுக்குள் மதுபானக்கடையை அகற்றிவிடுவோம் என்ற உறுதிமொழியை நிறைவேற்றி பாஸ் மார்க் வாங்கவேண்டும். அவ்வாறு நிறைவேற்றவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில் மாநில மீனவர் அணி தலைவர் சதீஸ், மாநில வர்த்தக அணி செயலாளர் இல.ராஜேந்திரன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜெய்சங்கர், மகளிரணி தலைவி