இன்றைய ராசிபலன் 20.6.15

download

மேஷம்: மற்றவரிடம் குடும்ப விஷயத்தைப் பேச வேண்டாம். வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

ரிஷபம்: புகழ் பெற விரும்பி செயலில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். உறவினர் இல்ல சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது.

மிதுனம்: எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சி தேவைப்படும். உறவினர் வருகையால் செலவு ஏற்படலாம். உடல் நலனில் அக்கறை உண்டாகும்.

கடகம்: சுப விஷயத்தில் சாதகமான முடிவு உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கண்டு மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்: மனதில் தன்மான உணர்வு மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ப வளர்ச்சி உண்டாகும். திடீர் செலவால் சேமிப்பு கரையும். ஆரோக்கிய விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.

கன்னி: நண்பரின் ஆலோசனை தக்க சமயத்தில் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். புதிய சொத்து, வாகனம் வாங்க யோகமுண்டு. இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடந்தேறும்.

துலாம்: மதிநுட்பமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். வெளியூர் பயணத்தால் இனிய அனுபவம் காண்பீர்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.

விருச்சிகம்: எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான வருமானம் கிடைக்கும். அவசர செலவுக்காக கடன் வாங்க நேரிடும். பிள்ளைகளின் செயல்பாடு ஆறுதல் அளிக்கும்.

தனுசு: திட்டமிட்டுச் செயல்பட்டு வளர்ச்சி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அரசு வகையில் ஆதாயம் உண்டாகும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

மகரம்: உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட நாள் விருப்பமும் இனிதே நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் காண்பீர்கள். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர்.

கும்பம்: தாராள மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். தொழில் வளம் சிறக்க கடின உழைப்பு தேவைப்படும். குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். மனைவி விரும்பியதை வாங்கித் தருவீர்கள்.

மீனம்: முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் திடீர் மாறுதல் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு கண்டு மகிழ்வீர்கள்.

Leave a Reply