எச்.ஐ.வி என்று அழைக்கப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திகளை அழிக்கும் நோய் (Human Immuno Deficiency Virus), மிகவும் கொடிய மற்றும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் ஆகும். அது பரவுவதால் மரணம் நிச்சயம் என்ற நிலையில், இந்நோயின் பொதுவான அறிகுறிகளை ஆரம்ப நிலையில் அறிந்து கொள்வதன் மூலம் அதன் பாதிப்புகளை ஓரளவு தவிர்த்திட முடியும்.
இந்நோயின் ஆரம்ப கால அறிகுறிகளை உணர்ந்து கொண்டால், சிகிச்சை செய்வது மிகவும் எளிமையாக இருக்கும். எச்.ஐ.வி நோயின் அறிகுறிகள் பல வருடங்களுக்கு வெளியே தெரியாமல் இருந்து, பின்னர் வெளிவரும். நீங்கள் எச்.ஐ.வி தொற்று உள்ளதாக சந்தேகப்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது உத்தமம்.
1. வழக்கத்தை விடவும் வேகமாக உங்கள் உடல் எடை குறைந்து வந்தால், நீங்கள் சற்றே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் இவ்வாறு எடை குறைவது எச்.ஐ.வி-யின் அறிகுறிகளில் ஒன்றாகும். எடை குறைவது இந்நோயின் முன்னேற்றத்தை குறிப்பதாக இருக்கும். இதன் அர்த்தம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.
2. தொடர்ச்சியான இருமல் எச்.ஐ.வி நோயின் அறிகுறியே. ஆனால், குப்பைகளை சுவாசிப்பதால் ஏற்படும் அலர்ஜியாகவும் கூட இது இருக்கலாம். எனினும், தொடர்ந்து வரும் காலங்களில் எச்.ஐ.வி வளர்ந்து வந்தால், இருமலும் அதிகரிக்கும்.
3. எச்.ஐ.வி கிருமியின் பாதிப்பை உங்கள் நகங்களில் கண்டறிய முடியும். எச்.ஐ.வி நோயின் அறிகுறிகள் விசித்திரமாக இருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். நகம் பிரிவதும், அவற்றின் வண்ணங்கள் குறைவதும் இதன் ஒரு பகுதியாகும். எனவே, இந்த அறிகுறியை கண்டால் பரிசோதனை செய்து கொள்ளவும்.
4. எச்.ஐ.வி-வின் ஆரம்ப கால அறிகுறிகளில் ஒன்றாகவே இந்த களைப்பு நிலை உள்ளது. உங்களுடைய தசைகள் மற்றும் மூட்டுகளில் அதிகளவு வலிகள் இருந்தால், எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
5. தலைவலி உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறி விட்டால், அதனையும் எச்.ஐ.வி பாதிப்பின் அறிகுறியாக கருதலாம். அது எச்.ஐ.வி-க்கான ஆரம்ப அறிகுறியாக இருப்பதால், ARS பரிசோதனைக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.
6. எச்.ஐ.வி நோயின் ஆரம்ப மற்றும் முற்றிய நிலைகளில் தோல் சொரசொரப்பாக மாறிவிடும். இதனால் உங்கள் தோலில் எரிச்சல் மற்றும் அரிப்பு மிக்க பகுதிகள் உருவாகின்றன. எனவே, உங்கள் தோலை சற்றே நெருக்கமாக கவனிக்கவும்.
– எச்.ஐ.வி பாதிப்புகளை சிகிச்சை செய்வதை விட, வராமல் தவிர்ப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுவோம்.