மணக்கும் பிரியாணி

biriyani_2350592f

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி – 200 கிராம்

கத்தரிக்காய் – கால் கிலோ

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்

இஞ்சி- பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

லவங்கம் – 4

நெய் – 3 டீஸ்பூன்

பட்டை – சிறு துண்டு

ஏலக்காய் – 3

மராட்டி மொக்கு – 1

அன்னாசிப் பூ – 1

பிரியாணி இலை – 1

வெங்காயம் – 1

தக்காளி – 2

தயிர் – 1 கரண்டி

நறுக்கிய கொத்தமல்லி, புதினா – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கத்தரிக்காயில் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் குழைத்துப் பூசி அரை மணிநேரம் ஊறவிடவும். பிறகு சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பாசுமதி அரிசியை ஊறவைத்து, முக்கால் பதம் வேகவிட்டு, வடித்துக் கொள்ளவும்.

குக்கரில் நெய்யைச் சூடாக்கி, பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். புதினா, மல்லி சேர்த்து நன்கு வதங்கியதும் வெங்காயம், தக்காளி சேர்த்துத் தொக்கு போல் வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு, காரப் பொடி சேர்த்துக் கிளறவும். தயிர், முக்கால் பதம் வேகவைத்த சாதம், பொரித்தெடுத்த கத்தரிக்காய் இவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி குக்கரை மூடிவைத்து ஐந்து நிமிடம் வேகவைக்கவும். ஆறியதும் குக்கரைத் திறந்து வெங்காய – தயிர் பச்சடியுடன் சேர்த்துப் பரிமாறவும்.

Leave a Reply