மத்திய அரசு பள்ளிகளில் யோகா கட்டாயம். அமைச்சர் ஸ்மிரிதி இரானி தகவல்

மத்திய அரசு பள்ளிகளில் யோகா கட்டாயம். அமைச்சர் ஸ்மிரிதி இரானி தகவல்

yogaகடந்த 21ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடியதை அடுத்து, யோகா குறித்து மிகப்பெரிய விழிப்புணர்ச்சி பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த யோகாவை வருடத்திற்கு ஒருமுறை யோகா தினத்தில் மட்டும் கொண்டாடாமல், தினசரி வழக்கத்திற்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுக்கவுள்ளது. அதன் முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுப் பள்ளிகள் மற்றும் மத்திய அரசின் ஆசிரியர் பள்ளிகளிலும் யோகா பாடம் கட்டாயமாக பயிற்று வைக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி இன்று அறிவித்துள்ளார்.

யோகாசன வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மற்றும் அதற்கு தேவையான கையேடுகளை டெல்லியில் இன்று வெளியிட்டு பேசிய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி இரானி பேசுகையில், “யோகாசனம் தொடர்பான செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பவர்களுக்கு 80 மதிப்பெண்கள் அளிக்கப்படும். எனவே, இந்த யோகாசன பாடத்திட்டத்தால் மாணவ- மாணவியருக்கு கூடுதல் கல்விச் சுமை ஏதும் இருக்காது.

இதேபோல், ஆசிரியர் பயிற்சி கல்வியிலும் யோகாசனம் தொடர்பான பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பெருகிவரும் யோகா கல்விக்கான தேவையை கருத்தில் கொண்டு, ஏராளமான யோகாசன ஆசிரியர்களையும் உருவாக்க வேண்டியுள்ளதால் யோகாசன கல்வி ஆசிரியர்களுக்கான மூன்று வகை பாடத்திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஒன்று, யோகாசனத்தில் பட்டயப் படிப்பு, அடுத்தது இளநிலை பட்டம், அதற்கு அடுத்த நிலையில் முதுநிலை பட்டம் ஆகும். இந்த திட்டத்தைப் பின்பற்ற விரும்பும் மாநில அரசுகளும் இந்த பாடத்திட்டத்தை தங்கள் பள்ளிகளில் அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், டெல்லியில் அடுத்த ஆண்டு தேசிய அளவிலான யோகாசன போட்டிகள் நடத்தப்படும். இதில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவ-மாணவியர்களில் ஒருவருக்கு முதல் பரிசாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும்”

இவ்வாறு அமைச்சர் ஸ்மிரிதி இரானி பேசியுள்ளார்.

Leave a Reply