சமீபத்தில் மேகி உணவுப்பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ரசாயனம் கலந்திருப்பதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உறுதி செய்ததை அடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்த உணவுப்பொருளுக்கு தடை விதிக்கப்பட்டது. உணவுப்பொருளில் காட்டும் இந்த கெடுபிடியை தற்போது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் மது வகைகளிலும் காட்ட முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் நாடு முழுவதும் விற்பனையாகி வரும் பீர், விஸ்கி உள்ளிட்ட மதுபான வகைகளின் தரமும் சோதனையின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் பீர், விஸ்கி, வோட்கா, ஜின் அல்லாது பீர்களும் தரச் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும், அடுத்த 2 மாதங்களில் மதுபான வகைகளின் தர நிர்ணயத்தை பரிசோதிக்கும் வகையிலான வரைவறிக்கை தயாரிக்கப்படும் என்றும் உணவுப்பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பொதுமக்கள்தங்கள் கருத்துகளை ஆணையத்திற்கு தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மதுபானங்களுக்கான தரநிர்ணய நிலைகள் உறுதி செய்யப்பட்டவுடன், அனைத்து மாநிலங்களுக்கும் தரம் குறித்த அறிக்கை தெரிவிக்கப்படும் என்றும் மாநில அரசுகள் அதன்பின்னர் மதுபான உற்பத்தியாளர்கள்களுக்கு தங்கள் அறிவுறுத்தலை மாநில அரசுகள் கூறலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.